புதுக்கோட்டை வட்டார மாரியம்மன் வரலாற்றில் தொன்மமும் பண்பாட்டு மோதல்களும்

Deconstructing the Mythology and Cultural Dynamics of Mariamman in Pudukkottai Region

Authors

  • செ.வினோதா | Vinotha.S Department of Tamil, Sri Ramakrishna Arts and Science College, Coimbatore.
  • ஜெயபால்.ப | Jayapal.P Department of Tamil, Sri Ramakrishna Arts and Science College, Coimbatore.

DOI:

https://doi.org/10.5281/zenodo.16400715

Keywords:

Mariamman, Folkloric Analysis, Oral Traditions, Cultural Exploitation, Power Dynamics, Cultural Hegemony, Representation, Folk Culture, Oral Narratives, Marginalization, Pudukkottai Region, Cultural Studies

Abstract

This study undertakes a critical examination of the oral traditions surrounding Mariamman, a prominent deity in the Pudukkottai region. Specifically, this research aims to uncover the cultural exploitation that occurs in the oral narratives and storytelling practices associated with Mariamman. By analyzing the various stories, legends, and myths about Mariamman, this study seeks to expose the power dynamics and cultural hegemonies that shape the representation and interpretation of this deity.

Through a critical folkloric approach, this research will examine how dominant cultural narratives and power structures influence the oral traditions of Mariamman, leading to cultural exploitation and marginalization of certain groups. This study aims to contribute to a deeper understanding of the complex relationships between culture, power, and representation, and to shed light on the ways in which cultural exploitation operates in the context of folk culture and oral traditions.

நாட்டுப்புறவியலில் காணலாகும் பல்வேறு வழக்காறுகளில் கதைகளும் ஒன்று. நாட்டுப்புறக் கதைகள் என்பவை வாய்மொழி மூலமாக அடுத்த தலைமுறைக்குப் பண்பாட்டையும் நடைமுறை இயங்கியல்களையும் கடத்தப் பயன்படும் ஒரு கருவியாகும். இக்கதைகள் மனிதன் தோற்றம் அடைந்த காலகட்டத்திலே தோற்றம் பெற்றன எனலாம். வாய்மொழியாக வழங்கப்படும் கதையானது ஒரே மாதிரியாக அமைவதில்லை. இவை கற்பனையுடன் தன் அனுபவத்தையும் ஒன்றுடன் ஒன்று கலந்து பரவுகிறது. தெய்வ வழிபாடுகளை அடியொற்றி காணப்படக்கூடிய கதைகள் மக்களினுடைய வாழ்வியலை எடுத்துரைப்பதாக அமைகிறது. சிறு தெய்வங்கள் மக்களுடைய வாழ்வியலில் இருந்து தோன்றியவை. தெய்வங்களைப் பறைசாற்றும் விதமாகவே பல்வேறு நாட்டுப்புறக் கதைகள் மக்களிடையே காணப்படுகிறது.   பல்வேறு மக்களால் வழிபாட்டிற்கு உரிய தெய்வமாக இருக்கக்கூடிய மாரியம்மன் சிறு தெய்வம் என்பது அறிஞர்களின் கூற்று. புதுக்கோட்டை வட்டாரத்தில் பல்வேறு மாரியம்மன் கோவில்களும் கதைகளும் கிடைக்கப்பெறுகிறது. இருப்பினும் அவற்றின் சாரம் ஒன்றையேத் தழுவி இருப்பதைக் களாய்வின்வழி அறியப்பட்டு அதுவே ஆய்வுக்களமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இங்கு மக்கள் வழிபாட்டில் காணலாகும் மாரியம்மன் பெரு தெய்வங்களினுடைய நீட்சியில் உருவாக்கப்பட்டதாகக் காட்டப்படுகிறது. வாய்மொழியில் நிலவும் புதுக்கோட்டை வட்டார மாரியம்மன் கதையில் காணலாகக் கூடிய பண்பாட்டு மோதல்களையும் பண்பாட்டு ஆக்கிரமிப்புகளையும் விளக்கி ஆராய்வதாக இவ்வாய்வு அமைகிறது.

Downloads

Published

01-07-2025

How to Cite

Vinotha.S, & Jayapal.P. (2025). புதுக்கோட்டை வட்டார மாரியம்மன் வரலாற்றில் தொன்மமும் பண்பாட்டு மோதல்களும்: Deconstructing the Mythology and Cultural Dynamics of Mariamman in Pudukkottai Region . PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 5(3), 54–62. https://doi.org/10.5281/zenodo.16400715

Similar Articles

1 2 3 4 5 > >> 

You may also start an advanced similarity search for this article.